News October 12, 2024

செங்கல்பட்டு – நெல்லை இடையே சிறப்பு ரயில்

image

சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு, பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பயணிகளுக்கு உதவும் வகையில், செங்கல்பட்டு திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் (06003) செங்கல்பட்டில் இருந்து நாளை மாலை 3:45 மணிக்கும், திருநெல்வேலியில் இருந்து (0600) நாளை மாலை 5:40 மணிக்கு புறப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 17, 2025

செங்கல்பட்டில் குடும்பத்துடன் இன்று இங்கே போங்க!

image

செங்கல்பட்டு ஊனமாஞ்சேரி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர் கோயில். இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமையானது. இந்தக் கோயிலில் உள்ள அஞ்சநேயர் (அனுமன்) இரண்டு முகங்களுடன் இருப்பது ஒரு தனித்துவமான அம்சம். இந்தக் கோயில் குழந்தை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. குடும்ப ஒற்றுமைக்கும் இங்கு வழிபடலாம். ஞாயிற்றுகிழமையான இன்று குடும்பத்துடன் சென்று வாருங்கள். ஷேர்

News August 17, 2025

ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

image

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

News August 16, 2025

செங்கல்பட்டு: இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!