News September 14, 2025

செங்கல்பட்டு: தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் இல்லை, மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணி, கட்டணமில்லா பேருந்து வசதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரடியாக அணுகலாம்.

Similar News

News September 14, 2025

செங்கல்பட்டு உருவான வரலாறு

image

தமிழ்நாடு மாநிலமாக உருவான போது 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தது. அதில் செங்கல்பட்டு மாவட்டமும் ஒன்று. பின் 1997ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2019ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு நகரை தலைமையிடமாக கொண்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க!

News September 14, 2025

செங்கை: பொறியாளரா நீங்க? கை நிறைய சம்பளத்தில் வேலை!

image

மத்திய அரசு நிறுவனமான இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஆசோசியேட் இன்ஜினியர் கிரேடு 2 & 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. கெமிக்கல், மெக்கானிக்கல், சிவீல், சுற்றுச்சூழல், தொழில்துறை மாசுபாடு குறைப்பு, எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், உலோகவியல் ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் வரும் செப்.24க்குள் இந்த <>லிங்கில் <<>>விண்ணப்பிக்கலாம். வயது 41க்குள் இருக்க வேண்டும். ரூ.80,000 – ரூ.ரூ.91,200 சம்பளம் வழங்கப்படும். SHARE IT

News September 14, 2025

செங்கல்பட்டு அருகே கார் மோதி இளைஞர் பலி

image

மறைமலைநகர் அருகே உள்ள கோகுலாபுரத்தைச் சேர்ந்தவர் லதாராம் (28). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து விட்டு ஜி.எஸ்.டி. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!