News February 9, 2026

செங்கல்பட்டு: தறிகெட்டு ஓடிய பைக்; துடிதுடித்து பலி!

image

சோழிங்கநல்லூர் வில்லேஜ் சாலையை சேர்ந்தவர் டில்லி பாபு (24). இவர் நேற்று காலை பைக்கில் கோவளத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி தாறு மாறாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முட்டுக்காடு பகுதியை கடந்து சென்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த டில்லி பாபு துடிதுடித்து உயிரிழந்தார். பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News February 10, 2026

செங்கல்பட்டு: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

செங்கல்பட்டு: தலைகுப்புற கவிழ்ந்த லாரி!

image

மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிழக்கு கடற்கரை சாலை யில் கட்டிட பணிக்காக எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு கனரக டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக கல்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பாரம் தாங்காமல் டிப்பர் லாரியின் டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. ஓட்டுனர் அன்பரசன் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.

News February 10, 2026

பறந்தது செங்கல்பட்டு ஆட்சியரின் உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 323 மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியர் தி. சினேகா தலைமையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். வனத்துறை பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு கையொப்ப இயக்கமும் தொடங்கப்பட்டது.

error: Content is protected !!