News September 24, 2025

செங்கல்பட்டு: தரமற்ற உணவு விற்பனையா? இதோ தீர்வு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுகாதாரமற்ற உணவு, தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட உணவு பொருட்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு இனி இருந்த இடத்திலேயே புகார் அளிக்கலாம். தமிழக அரசின் Tn Food Safety Consumer App என்ற செயலியிலோ (அ) இந்த<> இணையத்திலோ<<>> புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News September 25, 2025

தாம்பரம் மாநகராட்சி கடும் எச்சரிக்கை

image

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், ஸ்பூன், ஃபோர்க், தட்டு, கேரிபேக் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி இவற்றை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 25, 2025

செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News September 25, 2025

செங்கல்பட்டு: திருட்டு பட்டம் கட்டியதால் நண்பன் கொலை

image

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி அருகே, திருட்டு பட்டம் கட்டியதால், நண்பனையே கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அரை கிலோ கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதலில் பீர் பாட்டில் மற்றும் கத்தி பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!