News April 9, 2025
செங்கல்பட்டு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத்துறையில் காலியாக உள்ள சித்த மருத்துவ அலுவலர் 1, யுனானி மருத்துவ அலுவலர் 1, யோகா ஆண் 8, பெண் 8, பல்நோக்கு பணியாளர்கள் 3 ஆகிய பணியிடங்களுக்கு <
Similar News
News July 9, 2025
ஆபத்துகளில் இருந்து காக்கும் குளுந்தியம்மன்

செங்கல்பட்டு நகரில் அமைந்துள்ளது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த குளுந்தியம்மன் கோயில். குளுந்தியம்மன் இங்கு ஊர்காப்பு அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். குளுந்தியம்மன் “ஊர்காப்பு அம்மன்” ஆக இருப்பதால், ஊரையும் மக்களையும் ஆபத்துகளில் இருந்து காத்து ரட்சிப்பதாக நம்பப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு வந்து வழிபடுகின்றனர். மற்றவர்களுக்கு இதை பகிருங்கள்!
News July 9, 2025
தார்ப்பாய் இல்லாமல் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் சவுடு மண் மற்றும் ஜல்லி ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் இல்லாமல் செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சாலைகளில் மண் பரவி விபத்துகள் ஏற்படுகின்றன. போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தார்ப்பாய் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
News July 9, 2025
திருக்கழுக்குன்றம் பௌர்ணமி கிரிவலம் வரும் நேரம்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. அதன்படி, ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் நாளை (ஜூலை 10, 2025) அதிகாலை 2:30 மணிக்குத் தொடங்கி, ஜூலை 11, 2025 அதிகாலை 3:15 மணி வரை பக்தர்கள் வலம் வர உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் கிரிவலம் வந்து இறைவனின் அருளைப் பெறலாம். ஷேர் பண்ணுங்க மக்களே!