News October 29, 2025

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

image

வண்டலுார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியான பள்ளி மாணவி ஒருவர், பள்ளி வேனில் செல்வது வழக்கம். இவர் பள்ளி வேனை தவற விடும் போது, வழக்கமான ஆட்டோ ஒன்றில் பள்ளிக்குச் செல்வார். அவ்வாறு கடந்த ஏப்ரல் மாதம், மாணவி ஆட்டோவில் சென்ற போது, வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம், 42, ஆட்டோ டிரைவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அவரை, போக்சோ வழக்கில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 29, 2025

செங்கல்பட்டு: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

image

இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 29, 2025

செங்கல்பட்டு: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

image

செங்கல்பட்டு மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!

News October 29, 2025

செங்கல்பட்டு: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!