News October 15, 2025
செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து மாற்றம்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு GST சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்.17,18 தேதிகளில் ஆவடியில் இருந்து புறப்படும் கனரக வாகனங்கள் பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக தி.மலை போகலாம். மதுரவாயலில் இருந்து சென்னை GST சாலை நோக்கி வரும் வாகனம் ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் வழியாக வரலாம். செங்கல்பட்டு வழியாக வரும் வாகனம் ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கிளாம்பாக்கம்: தீபாவளி சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் (அக்.16) சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பயணிகள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக வழக்கமான மாநகர பேருந்துகளுடன் 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் அக்.19ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் பேருந்துகள் செல்லும் இடம், அவை நிற்கும் பிளாட்பாரம் எண் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 16, 2025
செங்கல்பட்டு: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

செங்கல்பட்டு மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.