News October 26, 2025
செங்கல்பட்டு: சாலையில் சுற்றிய மாடுகளை தூக்கி சென்ற நிர்வாகம்

திருப்போரூர் ரவுண்டானா பகுதி, செங்கல்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வந்தனர். இந்நிலையில் திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக களத்தில் இறங்கி சாலையில் சுற்றித்திரிந்த 28 மாடுகளைப் பிடித்துள்ளது. இதை அனைத்து இடத்திலும் நடைமுறை படுத்தவேண்டும் என வாகன ஓட்டிகள் கூறினர்.
Similar News
News October 26, 2025
செங்கல்பட்டு: இனி அலைச்சல் வேண்டாம் ஒரு மெசேஜ் போதும்!

செங்கல்பட்டு மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க.
News October 26, 2025
செங்கல்பட்டு: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர்!
News October 26, 2025
செங்கல்பட்டு: மனதை உலுக்கும் கொடூரத்தின் உச்சம்…!

கிண்டி பகுதியில், தாயுடன், கண்பார்வை குறைபாடுள்ள 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சிறுமியின் தந்தை, தாய் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். சிறுமியின் தாய் சாமுவேல்(37), என்பவரை 2வது திருமணம் செய்துள்ளார். இவர் 2020ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருக்கு ரூ.5 லட்சமும், ஆயுள் தந்ததையும் விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


