News February 2, 2026
செங்கல்பட்டு: கொத்து கொத்தாக செத்து கிடந்த நாய்கள்

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா, நரேஷ் குப்தா. இவர்கள் அங்கு இருந்த நாய்களை உணவளித்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த நாயகளால் அக்கம் பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வீட்டை காலி செய்யவும் வீட்டு ஓனர் தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்த அவர்கள், மீட்டும் அந்த நாய்களை பார்க்க வந்த போது அவைகள் செத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
Similar News
News February 9, 2026
செங்கல்பட்டில் EB பில் எகுறுதா..?

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
செங்கல்பட்டு: குளியலறையில் காத்திருந்த எமன்!

சோழிங்கநல்லூர் அண்ணா தெருவில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் (27) என்பவர் தங்கி பணி புரிந்து வந்துள்ளார். நேற்று அறையில் உள்ள குளியலறைக்கு சென்று வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
News February 9, 2026
செங்கல்பட்டு அருகே தூக்கில் தொங்கிய கணவன்!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (34), இவர் குடும்பத்து டன் காட்டாங்கொளத்தூரில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணதாசன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி திட்டி தீர்த்துள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


