News September 12, 2025
செங்கல்பட்டு: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 26, 2025
செங்கல்பட்டு இளைஞர்களே நாளை மாறவாதீர்கள்!

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக, நாளை செப் 27ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது. பையனுாரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லுாரி வளாகத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தெரிந்தவர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.
News September 25, 2025
காலாண்டு விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

காலாண்டு விடுமுறை, விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கத்திலிருந்துசிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வரும் செப். 26, 27, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2,430 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும் கோயம்பேட்டில் இருந்து மேற்கண்ட நாட்களில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
News September 25, 2025
இரவு ரோந்து காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.