News May 17, 2024
செங்கல்பட்டு: கொத்தனார் பலியான சோகம்

படப்பை ஒரத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி (49). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் அதே பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான வீடு கட்டுமான பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது, பலகையில் கட்டியிருந்த மின் விளக்கு தவறி கீழே விழுந்தது. அதை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடலை கைபற்றிய மணிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 30, 2025
செங்கை: மின்சார ரயில் மோதி பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ்(30) காட்டாங்கொளத்தூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 30, 2025
செங்கை: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இருவர் கைது!

கேளம்பாக்கத்தை அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(22). மற்றும் 17 வயது சிறுவன். இருவரும் 21 வயது மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும்17 வயது சிறுவனை கைது செய்தனர்.
News December 30, 2025
செங்கல்பட்டு விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் “நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று (டிச- 30) காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும், இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுக்களாக, அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளது.


