News February 17, 2026
செங்கல்பட்டு: கல் வீசி தாக்கிக் கொண்ட மீனவர்கள்

செங்கல்பட்டு, கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்களுக்கு இடையே சாலை உரிமை தொடர்பாக ஏற்பட்ட தகராறு நேற்று மோதலாக மாறியது. பால் குட ஊர்வலம் செல்லும் வழி குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் இரு தரப்பினரும் கல் வீசி தாக்கிக் கொண்டனர். சிலர் காயமடைந்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Similar News
News February 17, 2026
செங்கல்பட்டு: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

செங்கல்பட்டு மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <
News February 17, 2026
தாம்பரத்தில் போலீஸ் மீது தாக்குதல்!

செங்கை: தாம்பரம் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வகுமார் (56), இவர் நேற்று முன்தினம் இரவு, தாம்பரம் பேருந்து நிலைய உதவி மையத்தில் பணியில் இருந்தார். அப்போது, போதையில் இருந்த நபர் இவரிடம் தகராறு செய்து இவரை தாக்கியுள்ளோர். அங்கிருந்தோர், போதையில் இருந்த நபரை பிடித்து, தாம்பரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் (35) என்பது தெரிந்தது.
News February 17, 2026
செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டில் வரும் (பிப்ரவரி 20) அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம். அனைத்து தொடர்புடைய துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டு, மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


