News September 24, 2025
செங்கல்பட்டு: கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

திருநீர்மலையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ், நேற்று முன்தினம் தாம்பரம் அருகே தேநீர் கடை முன்பு நின்று கொண்டிருந்தபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. பழைய பகையின் காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த மாணவர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெறுதிறது.
Similar News
News September 25, 2025
தாம்பரம் மாநகராட்சி கடும் எச்சரிக்கை

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், ஸ்பூன், ஃபோர்க், தட்டு, கேரிபேக் உள்ளிட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி இவற்றை விற்பனை செய்வது அல்லது பயன்படுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News September 25, 2025
செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தபடுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கபடுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News September 25, 2025
செங்கல்பட்டு: திருட்டு பட்டம் கட்டியதால் நண்பன் கொலை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் அடுத்த திருத்தேரி அருகே, திருட்டு பட்டம் கட்டியதால், நண்பனையே கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அரை கிலோ கஞ்சா, செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதலில் பீர் பாட்டில் மற்றும் கத்தி பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.