News February 3, 2026
செங்கல்பட்டு: கணவர் முன்னே உடல் கருகி பலி!

கேளம்பாக்கம் அடுத்த ஏகாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் டெய்சி(40). தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வந்தார். அவரது கணவர் சுதாகருக்கும் இவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 30ஆம் தேதி கணவரை மிரட்ட, உடலில் மண்எண்ணெய் ஊற்றிய போது, அடுப்பில் இருந்த தீ, டெய்சி மீது பற்றியது. இதில், படுகாயமடைந்த அவர், சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
Similar News
News February 19, 2026
செங்கல்பட்டு: இனி வங்கிக்கு போக வேண்டாம்! – இது போதும்

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
செங்கல்பட்டு: மெடிக்களில் மருந்து வாங்குறீங்களா?

சமீப காலங்களில் காலாவதியான மருந்துகள் & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும். அல்லது அபராதம் விதிக்கப்படும். ஷேர்!
News February 19, 2026
செங்கல்பட்டு 1,731 பேருக்கு புதிய ரேஷன் கார்டு

செங்கல்பட்டில் மாதம் தோறும் 2வது சனிக்கிழமைகளில் ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்யப்படும். முகாம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மூலம் புதிய ரேஷன் கார்டு கோரி 2537 பேர் விண்ணப்பித்தனர். செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர் ஆகிய தாலுகாவில் இருந்து 1731 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.


