News January 16, 2026
செங்கல்பட்டு: கடலில் குளிக்க சென்றவர் பிணமாக வந்த சோகம்!

செய்யூர், சோத்துப்பாக்கம் பூங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் சத்யபிரியன் (16) 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று காலை முகத்துவாரம் பகுதிக்கு குளிக்க சென்றபோது கடலில் மூழ்கி மாயமானார். அங்கிருந்த மீனவர்கள் இவரை மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சூணாம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 28, 2026
செங்கை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

செங்கை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 28, 2026
கிளாம்பாகத்தில் பேருந்து விபத்து

கிளாம்பாகத்தில் இருந்து நேற்று மதியம் 30 பயணிகளுடன் விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பேருந்து செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி அருகே திடீரென பிரேக் பழுதானது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுனர் சாலையோர தடுப்பில் மோதி பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 28, 2026
செங்கை: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

செங்கல்பட்டு மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )


