News February 25, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தயாளன் (48), மேல்மருவத்தூர் அருகே செயல்பட்டு வரும் டிவிஎஸ் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கம் நோக்கி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, திருச்சி மார்க்கத்தில் இருந்து வந்த அதிவேக ரயில் மோதியதில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 28, 2026
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை மற்றும் சேலையூர் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக உரிமை கோரப்படாமல் உள்ள 349 வாகனங்களை பகிரங்க ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பள்ளிக்கரணையில் மார்ச் 4ம் தேதி, சேலையூரில் மார்ச் 6ம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறும். பள்ளிக்கரணையில் மார்ச் 2ம் தேதி, சேலையூரில் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
News February 28, 2026
செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (28) என்பவர், படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெய்யூர் கிராமத்தில் உள்ள சந்த்ராஜ் பெருமாள் கோவிலில் கட்டட வேலையில் ஈடுபட்டு வந்தார். வேலை செய்துகொண்டிருந்த போது சாரத்தில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 28, 2026
செங்கை: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன்

பல்லாவரம் பகுதியை சேர்ந்த கோபிநாதன் 44 இவருக்கு நிர்மலா 40 என்பவருடன் திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு கோபிநாதன், நிர்மலாவை ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து கை கால்களை வெட்டி விட்டு தப்பி சென்றார். இது குறித்து நிர்மலா அளித்த புகாரின் பேரில் கோபிநாதன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோபிநாதனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


