News December 19, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 20, 2025
செங்கல்பட்டு: போலீஸ் எங்களை மிரட்டுகிறது- செவிலியர்கள்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கிளாம்பாக்கம் & ஊரப்பாக்கம் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால்,போராட்டத்தைத் தொடர்கின்றனர். மேலும் போலீசார் தங்களை மிரட்டுவதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனவும் செவிலியர்கள் கூறுகின்றனர்.
News December 20, 2025
செங்கல்பட்டு: வேன்-பைக் மோதி 2 பேர் துடி துடித்து பலி!

ஆதனுர் கூடுவாஞ்சேரி சாலையில் நேற்று இரவு வேன் வேகமாய் சென்றது. அப்போது மாடு குறுக்கே வந்ததால் ட்ரைவர் வண்டிய திருப்ப முயன்றனர், அப்போது எதிர்ப்பாராத விதமாக எதிரே வந்த 2 பைக் மீது அடுத்தடுத்து வேன் மோதி பைக்கில் வந்த இருவரும் தூக்கி வேசப்பட்டனர். இந்த விபத்தில் ராஜ்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துலயே பலியானார்கள். மேலும் இருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ட்ரைவரை கைது செய்தனர்.
News December 20, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


