News May 7, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து போலீசாரின் விவரம் வெளியீடு

செங்கல்பட்டு போலீசாரின் “Knights on Night Rounds” (01.05.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர நேரங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 2, 2025
பரனூர் டோல்கெட்டில் விபத்து!

செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் சுங்கச்சாவடி அருகே இன்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த 2 கார்கள் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News November 2, 2025
செங்கை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு..

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News November 2, 2025
செங்கை: ரயில்வேயில் வேலை, ரூ.30,000 சம்பளம்!

ரயில்வேயின் கீழ் செயல்படும் ரயில்வே உணவு, சுற்றுலா நிறுவனத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பிரிவில் மொத்தம் 64 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு, கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.பி.ஏ., / எம்.பி.ஏ ஆகிய பட்டம் பெற்று இருக்கவேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட உள்ளது. சி.ஐ.டி வளாகம், தரமணி நவ.15 தேதி நேர்காணல் நடைபெற உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.


