News January 30, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு நேற்று (ஜன.29) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

Similar News

News February 6, 2026

செங்கல்பட்டு: வீதிக்கு வந்த மாணவர்கள்

image

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லுாரி மாணவர்கள், இலவச மடிக்கணினி வழங்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்படுவதாகவும், மூன்று ஆண்டு சட்டப் படிப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரே கல்லுாரியில் பாகுபாடு கூடாது என கூறி கோஷமிட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

News February 6, 2026

செங்கல்பட்டில் கூண்டோடு கைது

image

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் செங்கல்பட்டில் நேற்று 3-ஆவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிறப்பு பென்சன், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து போராட்டம் நடத்தப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News February 6, 2026

செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி!

image

ஆலந்துார், மோரிசன், 3வது தெருவை சேர்ந்தவர் எட்வின் (49) கொத்தனார். கடந்த 29ம் தேதி, பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மீனம்பாக்கம் பகுதியில், முன்னால் சென்ற காரை இடதுபுறமாக முந்த முயன்றபோது, அதே காரில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!