News January 3, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி விவரங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் (02.01.2026) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய உட்கோட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பணியில் இருக்கும் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் மக்களின் அவசரத் தேவைக்காகப் பகிரப்பட்டுள்ளன.
Similar News
News January 6, 2026
செங்கை: Spam Calls-க்கு இனி ‘End Card’!

தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் செங்கல்பட்டு மக்களே.. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். ஆம் 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த தகவலை உடனே உங்கள் contactல் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 6, 2026
செங்கை: இன்ஸ்டா live-ல்; தண்டவாளத்தில் தலை!

செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெயிண்டர் ஜெகதீஸ்வரன் 22, காதலித்துத் திருமணம் செய்த கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, “21 வயதுக்கு முன் யாரும் திருமணம் செய்ய வேண்டாம்; 25 வயதுக்கு மேல் செய்தால் தான் வாழ்க்கை சரியாக இருக்கும்” என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர், விரைவு ரயில் முன் பாய்ந்தார்.ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 6, 2026
செங்கை: தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி!

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஸ்டீபன் ராஜ் (30), கொளத்தூரில் நேற்று ஒரு கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


