News August 25, 2025
செங்கல்பட்டு இரவு நேர ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக. 25) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், குறிப்பாக இரவு நேரங்களில் பணிக்கு செல்லும் பெண்கள், காவல் நிலையம் வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News August 26, 2025
தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

தொடர் விடுமுறை, முகூர்த்தம், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் அளித்துள்ளார். அதன்படி இன்று 26ம் தேதி 675 பேருந்துகள், 28ம் தேதி 610 பேருந்துகள், 29ம் தேதி 405 பேருந்துகள், 30ம் தேதி 380 பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது.
News August 25, 2025
செங்கல்பட்டு: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News August 25, 2025
செங்கல்பட்டு: GH சரி இல்லையா? இதை பண்ணுங்க…

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511625>>தொடர்ச்சி<<>>