News November 21, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 21, 2025
வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஒன்றை இன்று நவம்பர் (21) வெளியிட்டுள்ளது. விதிமுறை தேவையற்ற தருணங்களில் HIGH BEAM LIGHT-யை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதனால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பார்வையில் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களில் செல்லும் கவனமாக செல்லவும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
News November 21, 2025
வண்டலுார் பூங்காவில் சிங்கம் ‘புவனா’ உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆறு சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 சிங்கங்கள் லயன் சபரி பகுதியிலும் 4 சிங்கங்கள் கூண்டில் அடைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புவனா என்ற 20 வயதுடைய பெண் சிங்கம் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (நவ.20) உயிரிழந்தது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தினர், சிங்கத்தின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அடக்கம் செய்தனர்.
News November 21, 2025
செங்கல்பட்டு: 10th தகுதி… மத்திய அரசு வேலை ரெடி

செங்கல்பட்டு மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <


