News September 12, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News September 13, 2025

செங்கல்பட்டில் செங்கோட்டையன் ஆதரவாளர் நீக்கம்

image

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என செங்கோட்டையன், இபிஎஸ்-க்கு கெடு விதித்து இருந்தார். இதனையடுத்து செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து இபிஎஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட திருப்போரூர் தெற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாஸ்கன் (எ) பார்த்தசாரதியை கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கி இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News September 13, 2025

செங்கல்பட்டு: பைக், கார் இருக்கா? உங்களுக்கு தான்

image

செங்கல்பட்டு மக்களே இன்று 13ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

News September 13, 2025

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

image

தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள உயிரிழந்தவர்கள், ஒரே வாக்காளர் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இரட்டை பதிவு, குடி பெயர்ந்தவர்கள் என 30 ஆயிரம் பேரை நீக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சினேகாவிடம் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் மனு அளித்தார். செங்கல்பட்டு நகர கழக செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார்,நகரத் துணைச் செயலாளர் விநாயகம் உடனிருந்தனர்.

error: Content is protected !!