News September 1, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(செப்.1) இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நேற்று(ஆக.31) இரவு 10 மணி முதல் இன்று (செப்.1) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 3, 2025

திமுக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

image

சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள பாரதியார் நகரில், தி.மு.க. நிர்வாகி மற்றும் தொழிலதிபரான ரித்தீஸ் வீட்டில் 140 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்தது. அவர்களிடம் இருந்து 119 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

News September 3, 2025

செங்கல்பட்டில் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா, ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். விருப்பமுள்ளவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ஆம் தேதி ஆகும்.

News September 3, 2025

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் நிதி ஒதுக்கீடு

image

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கப் பகுதியாக, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை புதிய வழித்தடம் அமைய உள்ளது. இதன் முதல் கட்டப் பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு 1,963.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தத் தடத்தில் 13 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த வழித்தடத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!