News January 22, 2025
செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு சாரா அமைப்புகளில் மற்றும் பொது நிறுவனங்களில் சமூக பொறுப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் இன்று (22.01.2025) நடைபெற்றது. இதில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அனாமிகா ராமேஷ், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார், மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News September 16, 2025
செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்களை கொண்ட இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.8,500- 23,800 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 25.09.2025 க்குள் அதிகாரப்பூர்வ மாவட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News September 16, 2025
செங்கல்பட்டு இரவு ரோந்து பணி விவரம்

செங்கல்பட்டில் நேற்று (செப்-15) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 15, 2025
செங்கல்பட்டு: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

செங்கல்பட்டு மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க