News April 27, 2024
செங்கல்பட்டு: ஆட்சியர் அதிரடி உத்தரவு

திருக்கழுக்குன்றத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் தலமாக விளங்கும் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சங்க தீர்த்த களத்தில் கழிவு நீர்கள் கலந்து அசுத்தம் ஏற்பட்டுள்ளது. அதனை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டு குளத்தை தூர்வார உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News August 23, 2025
செங்கை பேருந்து நிலையத்தில் பார்க்கிங் அடிக்கல் நாட்டு விழா

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ₹3.58 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. 9,200 சதுர அடியில் அமையவுள்ள இந்த வளாகத்தில், தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் முதல் தளத்தில் 16 கடைகள் இடம்பெறும். இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
News August 22, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 22) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.
News August 22, 2025
செங்கை: இன்ஜினியரிங், டிப்ளமோ, ITI முடித்தவர்கள் கவனத்திற்கு!

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் இஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.