News April 5, 2024
செங்கல்பட்டு அருகே 4 பேர் கைது

மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி பகுதி தனியார் விடுதியில் வேலை செய்து வரும் கமல் குமார், நவ்நீத் மற்றும் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி பணி முடிந்து அப்பகுதி சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது 2 டூவீலர்களில் வந்த 4 பேர், நவ்நீத்தின் செல்போனை பறித்து சென்றனர். இதையடுத்து புகாரின் பேரில் மாமல்லபுரம் போலீசார் ஏற்கனவே கேளம்பாக்கம் மணிகண்டனை (27) கைது செய்த நிலையில், நேற்று 3 சிறுவர்களை கைது செய்தனர்.
Similar News
News February 11, 2026
செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <
News February 11, 2026
செங்கல்பட்டு: ஒண்டர்லா சென்றவர்கள் துடிதுடித்து பலி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத் (25). இவர், தன் தோழியான ஆவடியைச் சேர்ந்த சுவேதா (25) என்பவருடன், நேற்று பைக்கில் ஒண்டர்லா சென்று கொண்டிருந்தனர். கீழ்கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை வளைவு பகுதியில் சென்றபோது, நெல்லிக்குப்பத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
News February 11, 2026
செங்கல்பட்டில் கூண்டோடு கைது!

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்புச் சட்டம், 10 சதவீத ஓய்வூதிய பிடித்தம் ரத்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


