News May 2, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து

image

ஆறுமுகம் என்பவர் தனது மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் நேற்று மாருதி சுசூகி காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துார் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின் மீது மோதி 10 அடி ஆழமுள்ள மழைநீர் செல்லும் கால்வாயில் கவிழ்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துமனையில் அனுமதித்தனர்.

Similar News

News February 2, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி

image

குன்றத்துார் அருகே சின்னப்பணிச்சேரியைச் சேர்ந்தவர் பாபு (45) லாரி ஓட்டுநர். இவர், நேற்று இரவு எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, புதிய லாரிக்கு பாடி கட்டுவதற்காக திருச்சி புறப்பட்டார். மீஞ்சூர் – வண்டலுார் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே எருமையூர் பகுதியை கடந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில் பாபு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

News February 2, 2026

செங்கல்பட்டு: கொத்து கொத்தாக செத்து கிடந்த நாய்கள்

image

பெருங்களத்தூர் அருகே நெடுங்குன்றம் பகுதியில் வசித்து வந்தவர்கள் பிரியங்கா, நரேஷ் குப்தா. இவர்கள் அங்கு இருந்த நாய்களை உணவளித்து பராமரித்து வந்தனர். இந்நிலையில், இந்த நாயகளால் அக்கம் பக்கத்தினருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும், வீட்டை காலி செய்யவும் வீட்டு ஓனர் தெரிவித்துள்ளார். வீட்டை காலி செய்த அவர்கள், மீட்டும் அந்த நாய்களை பார்க்க வந்த போது அவைகள் செத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

News February 2, 2026

செங்கல்பட்டு: இன்று முதல் வீட்டிற்கே வந்து சேரும்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 841 நியாய விலைக் கடைகளில் 32,242 தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் வருகின்ற 2,3,4 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் தாயுமானவர் திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று பொது விநியோகத் திட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!