News June 15, 2024
செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

திரிசூலத்தை சேர்ந்தவர் மகாராஜா (43). இவர் திரிசூலம் – மூவரசம்பட்டு சாலையில் உள்ள தனியார் கிரஷரில் மிஷின் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் மது குடித்துவிட்டு கிரஷரிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை லோடு ஏற்ற சென்ற லாரி இவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் டிரைவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 27, 2025
பம்மல்: மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி

பல்லாவரம் அடுத்த பம்மலில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் உள்ள சமையல் அறையில் இன்று (செப்.27) காலை மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடையில் பணிபுரிந்த மின் பணியாளர் மணிகண்டன் மற்றும் கடை ஊழியர் பார்த்திபன் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News September 27, 2025
செங்கல்பட்டு: ஆதார் கார்டில் பிரச்னையா..? உடனே CALL!

செங்கல்பட்டு மக்களே.., வருகிற அக்.1ம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை அனைவருக்கும் SHARE செய்யுங்க!
News September 27, 2025
செங்கல்பட்டு: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <