News August 25, 2025

செங்கல்பட்டு அருகே கார் மோதி இருவர் உயிரிழப்பு

image

செங்கல்பட்டு அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று(ஆக.24) இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது அவ்வழியே வேகமாக வந்த கார் மோதியதில் சதீஷ்குமார் மற்றும் சுனில் என்ற இளைஞர்கள் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 25, 2025

செங்கல்பட்டு: ஒரு call செய்தால் போதும்..! உடனடி தீர்வு..!

image

செங்கல்பட்டு மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். SHARE <<17509881>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

செங்கல்பட்டு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News August 25, 2025

தாம்புரம்: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

image

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!