News April 8, 2024

செங்கல்பட்டு அருகே அபாயம்

image

தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில் பக்கவாட்டு சுவரில் நீர் கசிந்து வெளியேறுவதால் வாகன ஓட்டிகள் வழுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தாம்பரம் – கிழக்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் இந்த பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பக்கவாட்டு சுவரில் இருந்து நீர் கசிந்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News February 11, 2026

செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே <>கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

செங்கல்பட்டு: ஒண்டர்லா சென்றவர்கள் துடிதுடித்து பலி!

image

வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத் (25). இவர், தன் தோழியான ஆவடியைச் சேர்ந்த சுவேதா (25) என்பவருடன், நேற்று பைக்கில் ஒண்டர்லா சென்று கொண்டிருந்தனர். கீழ்கல்வாய் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை வளைவு பகுதியில் சென்றபோது, நெல்லிக்குப்பத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி வந்த லாரி, பைக் மீது மோதி கோரவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

News February 11, 2026

செங்கல்பட்டில் கூண்டோடு கைது!

image

செங்கல்பட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்புச் சட்டம், 10 சதவீத ஓய்வூதிய பிடித்தம் ரத்து, காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. போராட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100 பேரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!