News January 22, 2026
செங்கல்பட்டு: அதிகாலையில் பயங்கரம்!

கோவிலம்பாக்கம் 200 அடி ரேடியல் சாலையில் முருகேசன் என்பவர் பி.வி.சி கதவு, ஜன்னல் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த கடையில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த மேடவாக்கம் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும், விற்பனைக்குத் தயாராக இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
செங்கல்பட்டு: நோய்களை தீர்க்கும் அதிசய தலம்!

செங்கல்பட்டு பரமேஸ்வரமங்கலத்தில் உள்ளது கைலாசநாதர் கோயில். பாலாற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயில் பார்ப்பதற்கு சிறிய தீவு போல காட்சி அளிக்கிறது. மூலவராக கைலாச நாதரும், கனகாம்பிகையும் உள்ள நிலையில், தீவு போன்ற இந்த கோயிலின் அமைப்பு அமைதி தரும் வகையில் உள்ளது. இங்கு வழிபட்டால், நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News January 31, 2026
செங்கை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

செங்கை மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 31, 2026
வண்டலூரில் பெரும் விபத்து!

வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சிக்னலைக் கண்டு அதிர்ச்சியடைந்த டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இதில் லாரி எதிர்திசைக்குத் பாய்ந்து சாலையின் குறுக்கே நின்றது.அப்போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் சாதுர்யமாகப் பிரேக் பிடித்து பெரும் விபத்தைத் தவிர்த்தார். காயமடைந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


