News February 15, 2026
செங்கல்பட்டு:மனைவியை அடித்துக் கொன்ற கணவர்!

தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாப்பாடு பரிமாற மறுத்த மனைவியை, கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணேசன் என்பவர் தனது மனைவி அமுதாவிடம் உணவு கேட்டபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்து டேபிள் பேனால் அவரைத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அமுதா உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
தாம்பரம்: புதுமணப்பெண் எடுத்த விபரித முடிவு!

தாம்பரம் அடுத்த இரும்புலியூர், முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் மருத்துவராக உள்ளார். இவர் அபிநயா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் அருண்குமார் சந்தேகம் அடைந்ததால் அபிநயா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ., விசாரணை நடைபெற்று வருகிறது.
News February 18, 2026
செங்கல்பட்டில் EB பில் எகிறுதா..?

செங்கல்பட்டு மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 18, 2026
செங்கல்பட்டு: காவலர் குடியிருப்பு வளாகத்தில் திடீர் தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான விபத்துக்குள்ளான வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்தில் 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் தீயில் கருகின. இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயினை அணைத்தனர்.


