News August 20, 2025
செங்கல்பட்டில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்

செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வரும் 22ம் தேதி காலை 10:30 மணிக்கு, நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்பான பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 29, 2026
தாம்பரம் ஊர்க்காவல் படையில் விண்ணப்பம் துவக்கம்

தாம்பரம் மாநகர ஊர்க்காவல் படையில் 29 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 32 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதுடைய, குற்றப்பின்னணி இல்லாத தாம்பரம் பகுதி மக்கள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன-31 மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 9952255493, 7418375910 அழைக்கலாம்.
News January 29, 2026
செங்கை: சான்றிதழ்கள் பெறுவது இனி ரொம்ப ஈஸி..

செங்கல்பட்டு மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News January 29, 2026
செங்கை: உயிருடன் எரிந்த ஆட்டோ ஓட்டுநர்!

பழைய பெருங்களத்தூரைச் சேர்ந்த அஜித்குமாரின் மனைவி சங்கீதா குழந்தை இல்லாத காரணத்தால் பிரிந்து சென்றார். இதனால் அஜித்துக்குமார் விரக்தியில் இருந்துள்ளார். இதனால் நேற்று முன்தினம் போனில் அழைத்தும் மனைவி வர மறுத்ததால், மனமுடைந்த அஜித்குமார் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்துக்கொண்டார். படுகாயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


