News March 23, 2025
செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News September 23, 2025
செங்கல்பட்டில் இனி இது கட்டாயம்..!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் நேற்று (22.09.2025) வெளியிடப்பட்ட அறிக்கையில், இனி வரும் காலங்களில் பனை மரத்தை வெட்டுவதற்கு, ஆட்சியர் அனுமதி கட்டாயமாக்கப்பட்டு சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பனை மரங்களை வெட்டுவதற்கு, ஆட்சியரின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
News September 23, 2025
செங்கல்பட்டு: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள்<
News September 23, 2025
செங்கல்பட்டு இளைஞர்களே செப். 27 அன்று மறக்காதீங்க!

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (செப். 27) அன்று நடைபெறுகிறது. விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்பக் கல்லூரி, பையனூரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 044-27426020 தொடர்புகொள்ளலாம். செம்ம வாய்ப்பு வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.