News July 24, 2024
செங்கல்பட்டில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று(24) ஆர்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில், எதிர்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து விட்டு, எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை திரும்பபெற கோரியும், தொழிற்சங்க கோரிக்கைகளை புறக்கணித்த பட்ஜெட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Similar News
News August 10, 2025
செங்கல்பட்டு: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
News August 10, 2025
செங்கல்பட்டு மக்களுக்கு குட்-நியூஸ்!

சுதந்திர தினத்தையொட்டி 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் – செங்கோட்டை, சென்ட்ரல் – போத்தனூர், தாம்பரம் – நாகர்கோயில், மங்களூரு – திருவனந்தபுரம் ஆகிய 4 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் 14, 16, 17 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு தொடங்கிவிட்டதால் உடனே புக் பண்ணுங்க. அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்!<<17359009>>தொடர்ச்சி<<>>
News August 10, 2025
எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் 1/3

வரும் 14-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக செல்லும். 17ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும். <<17359016>>தொடர்ச்சி<<>>