News November 1, 2025
செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (நவ.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

செங்கல்பட்டு மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
செங்கல்பட்டு: மெட்ரோவில் சூப்பர் வேலை; ரூ.30,000 சம்பளம்!

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு டிப்ளமோ, BE படித்த 18-33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாதம் ரூ.27,000- 30,000 சம்பளம் வழங்கப்படும். சென்னையில்<
News November 1, 2025
செங்கல்பட்டு: சரக்கு வாகனம் தலைபகுப்புற கவிழ்ந்து விபத்து

ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று காலை ‘ஆக்சிஜன் லோடு’ ஏற்றி வந்த சரக்கு வாகனம் S.P.கோவில் அடுத்த சத்யா நகர், ஜி.எஸ்.டி., சாலை அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


