News January 9, 2026

செங்கல்பட்டில் பரபரப்பு!

image

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 8-வது தளத்திலிருந்து விழுந்து சிறுவன் நவீன் பலியானார். படுக்கையறை ஜன்னலில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால், சோபாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்தது. கட்டுமான நிறுவனத்தின் அஜாக்கிரதையே உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Similar News

News January 28, 2026

ஜனவரி 30 விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

செங்கல்பட்டில் ஜனவரி 30 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள், திட்டங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 28, 2026

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை – சைபர் குற்ற விழிப்புணர்வு

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், சந்தேகமான செயல்களை உடனடியாக 1930 உதவி எண் அல்லது cybercrime.gov.in மூலம் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News January 28, 2026

செங்கல்பட்டு அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

image

கேளம்பாக்கம் அருகே கழிப்பட்டூரில் தனியார் குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருப்பவர் அனுஶ்ரீ. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஸ்ரீயின், தாத்தா சேஷாவரதலு உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த அனுஸ்ரீ நேற்றிரவு தந்தைக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

error: Content is protected !!