News November 20, 2024

செங்கல்பட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

image

செங்கல்பட்டு மற்றும் நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.21) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங் போர்டு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 8, 2025

செங்கல்பட்டு: கோயிலுக்கு சொந்தமான இடம் மீட்பு

image

நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் உள்ள ஶ்ரீ நந்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பில் ஜெய்பீம் நகர் 5வது தெருவில் 1,752 சதுர அடி இடம் உள்ளது. இந்த இடம் சாது சுந்தர்சிங் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. இந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நேற்று (ஆகஸ்ட் 7) அறநிலையத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை மீட்டனர்.

News August 8, 2025

செங்கல்பட்டு: SBI வங்கியில் வேலை…

image

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். சென்னையில் மட்டும் 380 பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். <>இந்த லிங்கில்<<>> வரும் 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்

News August 8, 2025

செங்கல்பட்டுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 8) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!