News August 13, 2024
செங்கல்பட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

செங்கல்பட்டில் நாளை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சித்தலபாக்கம், வெங்கைவாசல், முடிச்சூர், அஸ்தினாபுரம், செம்பாக்கம், ஜெயேந்திரா நகர், சாம்ராஜ் நகர், அனகாபுத்தூர், ஆதம் நகர், பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, மாடம்பாக்கம், ஜோதி நகர், ஆதித்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Similar News
News March 5, 2026
செங்கல்பட்டில் நிறம் மாறும் தொகுதி!

திருப்போரூரில் கடந்த 2021 தேர்தலில் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜி வெறும் 1,947 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அதாவது, மிகவும் நூலிழையில் வெற்றி தீர்மானிக்கப்பட்ட தொகுதி. IT நிறுவனங்கள் ஒருபுறம், கிராமப்புற விவசாய நிலங்கள் மறுபுறம் என இருவேறு துருவங்களைக் கொண்ட தொகுதி. பா.ம.க மற்றும் வி.சி.க ஆகிய இரு கட்சிகளுமே இங்கு சம பலத்துடன் இருப்பதால், ஒவ்வொரு தேர்தலிலும் இங்கு அனல் பறக்கும்.
News March 5, 2026
செங்கல்பட்டு: உடல் தூக்கி வீசப்பட்டு பலி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தின் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ரயில் மோதி உடல் தூக்கி வீசப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த தாம் பரம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆண் நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
News March 5, 2026
செங்கல்பட்டில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

செங்கல்பட்டு பகுதியில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை காவல்துறையினரின் சிறப்பு ரோந்து பணிகள் நடைபெறுகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் காவலர்கள் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். அவசர தேவைகளுக்கு பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற அவசர எணை டயல் செய்து தகவல் தெரிவிக்கலாம்.


