News January 10, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி உண்ணாமலை (55) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை விரக்தியில் உண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

செங்கல்பட்டு: உங்களிடம் VOTER ID உள்ளதா?

image

உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> இந்த லிங்கில்<<>> சென்று உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க

News January 25, 2026

மறைமலைநகர்: இது நம்ம ஆட்டம்–2026’ போட்டிகள் தொடக்கம்

image

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (ஜன.25) முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம்–2026” தொடங்கியது. இந்த நிகழ்வை ஆட்சியர் சினேகா I.A.S மற்றும் எம்.எல்.ஏ வரலக்ஷ்மி மதுசூதனன் தொடங்கி வைத்தனர். 16–35 வயதுக்குட்பட்ட 600 வீரர்கள் 8 வகை போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றியாளர்கள் மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள்.

News January 25, 2026

செங்கல்பட்டு: விவசாயிகளுக்கு ரூ.15,000 மானியம்!

image

விவசாய மக்களுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மின்மோட்டார் பம்பு செட் மானியத் திட்டம், தற்போது அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம் வழங்கி வருகிறது. இதில், விண்ணப்பிக்க தாங்கள் சம்மந்தப்பட்ட வருவாய்க் கோட்டத்திலுள்ள உதவி செயற் பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறையில் தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!