News January 24, 2026
செங்கல்பட்டில் தலையில் கல்லைப்போட்டு கொலை

பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த கார்த்திக் (25) பூங்காவில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்ததில், குமார்(27), விஜயகுமார்(28), சரத் என்ற சரத்குமார்(35), சரண்ராஜ்(29), மற்றொரு கார்த்திக்(26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டையிட்டு தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. மது அருந்த பணம் கொடுக்காததால் இந்த கொடூரம் அரங்கேற்றியுள்ளது.
Similar News
News January 25, 2026
மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல்

மாமல்லபுரம் அருகே த.வெ.க செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் நட்சத்திர விடுதி முன்பாகக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைவர் விஜய் வருகை மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால், கிழக்கு கடற்கரைச் சாலையில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
News January 25, 2026
மாமல்லபுரத்தில் த.வெ.க சார்பில் கூட்டம்

மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், (த.வெ.க) செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அவர் சற்றுமுன் அரங்கம் வந்தடைந்தார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான செயல் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் இதில் திரண்டுள்ளனர்.
News January 25, 2026
தாம்பரம்: வீடு புகுந்து துணிகர சம்பவம்!

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பால்பாண்டி, நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருமண விழாவிற்குச் சென்றார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


