News October 30, 2025

செங்கல்பட்டில் கிராம சபை கூட்டம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.01 உள்ளாட்சிகள் தினத்தன்று காலை11.00 மணிக்கு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. ஊராட்சியில் வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்தவும் பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக விளம்பரப் பலகைகள் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-இன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.

Similar News

News October 30, 2025

செங்கை: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நாளை (அக்.31) காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

செங்கை: TVK போஸ்டரால் பரபரப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தமிழக வெற்றி கழகம் தொண்டர்களால் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளது. அதில் “மீண்டும் அப்பா SAC அவர்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்” என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய பேட்டியில் ‘நான் தவெகவில்தான் இருக்கிறேன்’ என்று SAC கூறிய நிலையில், இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.

News October 30, 2025

செங்கல்பட்டு: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!