News August 30, 2025

செங்கல்பட்டில் கடன் வசதி திட்டம்

image

வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஒரு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைத் திட்டங்களான பதப்படுத்தும் மையங்கள், கிடங்குகள், குளிர்பதன தொடர் சேவைகள் அமைக்க ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். இந்தக் கடனை 3% வட்டியுடன் 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம். இதுபற்றி மேலும் விவரங்கள் அறிய, உங்கள் வட்டார வேளாண் அலுவலகத்தை அணுகவும்.

Similar News

News September 27, 2025

செங்கல்பட்டு: பண்டைய பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு!

image

செங்கல்பட்டு மாவட்டம் வள்ளிபுரம் பாலாற்றில், செய்யாறு கல்லூரி வரலாற்றுத் துறை விரிவுரையாளர் மதுரை வீரன், கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய கால பீரங்கி குண்டுகள், கல் குண்டு, கைத்துப்பாக்கி ஈய குண்டு, போர் வீரரின் ஆடை பொத்தான் ஆகியவற்றை அவர் கண்டெடுத்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள் அப்பகுதியின் வரலாற்றை அறிய உதவுகின்றன. இந்த தகவலை பிறரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News September 27, 2025

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவு

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது
செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

News September 26, 2025

சிட்லபாக்கம் ஏரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சினேகா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவ்வப்போது ஏரியில் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!