News January 3, 2026
செங்கல்பட்டில் உடல் நசுங்கி கொடூர பலி!

மேடவாக்கத்தில் இருந்து செம்மொழி மெயின் சாலை வழியில் பகதூர் சிங்(39) என்பவர் ஓட்டி வந்த பைக் தண்ணீர் லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய பகதூர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவர் பின்னால் லிப்ட் கேட்டு வந்த மதுரையைச் சேர்ந்த பாஸ்கர்(28) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, லாரி டிரைவர் இசக்கியை(24) போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News January 27, 2026
மாமல்லாபுரம்: நகராத 17 ஆண்டு கால திட்டம்

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தை செங்கல்பட்டுடன் இணைக்கும் ரயில் பாதை திட்டம், 17 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. சாலை போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ள பயணிகள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள், இத்திட்டத்தை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வலியுறுத்துகின்றனர். கடந்த 2011-ல் கற்கள் நடப்பட்டும், நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தொய்வால் பணி முடங்கியுள்ளது.
News January 27, 2026
செங்கை: கிராம ஊராட்சி செயலாளர் பலி!

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக அதே பகுதியை சேர்ந்த தசரதன் (35) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று (ஜன.26) தனது வயல்வெளியில் உள்ள மின் மோட்டாரில் மின் மோட்டார் இயக்க சுவிட்ச் ஆன் செய்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார். மேலும், மேல்மருவத்தூர் போலீசார் இதனை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 27, 2026
செங்கை: காதலன் கண்முன்னே துடிதுடித்த பலி!

கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி ராஜசேகரின் மகள் அனீஷா (25). இவர் செங்கல்பட்டு மாவட்டம் ஏகாட்டூரில் தங்கி சட்டம் படித்து வந்தார். இவர் தனது காதலன் நித்தியானந்தத்திடம் வீடியோ காலில் பேசியவாறே, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார், அனீஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


