News July 28, 2024
செங்கல்பட்டில் இன்றும் மின்சார ரயில்கள் ரத்து

தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் 55 மின்சார ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான மின்சார ரயில்கள் ரத்து. அதற்கு பதிலாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்புகள் ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது.
Similar News
News March 3, 2026
செங்கை: மலிவு விலையில் பைக், கார்

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்களுக்கு மார்ச்.7ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க இன்று மாலை 5 மணிக்குள் ரூ.1,000 நுழைவு கட்டணம் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News March 3, 2026
திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 3, 2026
செங்கை அருகே கோர விபத்து.. ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (19). இவர் நேற்று இவரது உறவினர் பூர்ணிமா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாடம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் மேம்பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அன்பரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.


