News March 22, 2025
செங்கல்பட்டில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்லாவரம், தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?
Similar News
News September 29, 2025
செங்கல்பட்டு: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 29, 2025
செங்கல்பட்டு: கடலில் மூழ்கிய அப்பா, மகள்கள்

மாமல்லபுரம் அருகேயுள்ள சூளரிக்காடு கடற்கரையில் நேற்று (செப்.28) மாலை சென்னை, அகரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மகள்களுடன் கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ராட்சத அலையில் சிக்கி மூவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் வெங்கடேசன் உடல் கரை ஒதுங்கிய நிலையில் மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகியோரின் உடல்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
News September 29, 2025
செங்கல்பட்டில் 4,713 பேர் ஆப்சென்ட்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் சார்பில் 645 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகள் நேற்று (செப்.28), தமிழகம் முழுவதும் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில், மேற்கண்ட தேர்விற்கு 15,504 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 56 தேர்வு மையங்கள் மாவட்ட நிர்வாகம் அமைத்திருந்தது. இதில் 4,713 பேர் தேர்வு எழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.