News May 4, 2024

செங்கல்பட்டில் ஆரஞ்சு அலர்ட்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News November 20, 2024

விவசாயிகள் குறைதீர் கூட்டம்: ஆட்சியர் தகவல்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்ட அளவில் நடைபெற உள்ளது. வரும் 21ஆம் தேதி மதுராந்தகத்திலும், 22ஆம் தேதி செங்கல்பட்டிலும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11 மணிக்கு தொடங்கும் இந்தக் கூட்டங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

செங்கல்பட்டில் நாளை மின்தடை அறிவிப்பு

image

செங்கல்பட்டு மற்றும் நல்லம்பாக்கம் துணை மின் நிலையத்தில் நாளை (நவ.21) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், காலை 9 மணி முதல் 4 மணி வரை கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங் போர்டு, நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 20, 2024

சிட்கோ தொழிற்பேட்டையில் ஊழியர்கள் போராட்டம்

image

ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.