News March 20, 2025

செங்கல்பட்டின் பெயர் காரணம் தெரியுமா?

image

சென்னையின் நுழைவாயில் என அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தது. எனவே,செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி இப்பொழுது செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. இது செங்கை எனவும் அழைக்கப்படுகிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் செய்யுங்கள்.

Similar News

News September 20, 2025

செங்கல்பட்டு இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் செப்-19 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 19, 2025

மசாஜ் சென்டரில் விபச்சாரம்- 7 பெண்கள் மீட்பு

image

குரோம்பேட்டை எம்.ஐ.டி., மேம்பாலம் அருகே ஜிஎஸ்டி சாலையில் மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து தாம்பரம் மாநகர காவல் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட வடமாநில பெண்கள் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி உட்பட 7 பேரை மீட்டனர். மசாஜ் சென்டர் நடத்திய தினேஷ்குமார் 35, ஜெபின் 26 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

News September 19, 2025

செங்கை: TCS, WIPRO, Cognizantல் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு

image

ன்தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் மூலம் ServiceNow Developer மற்றும் Salesforce Developer சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறுகிய கால இந்த பயிற்சியில் உதவித்தொகை மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும். B.sc (computer/IT), B.E/B.Tech படித்த மாணவர்கள் <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணபிக்கலாம். TCS, WIPRO மற்றும் Cognizant நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!