News December 27, 2025
செங்கம் : முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்.

செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.18.50 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் அப்பகுதி பொதுமக்கள் இன்று தங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். புதிய கட்டட வசதி மூலம் அப்பகுதி மாணவர்களின் உயர்கல்வித் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 21, 2026
தி.மலை: TNPSC தேர்வுக்கு படிக்கிறீர்களா?

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் TNPSC Group–2A மெயின் தேர்வுக்கு தயாராகும் தேர்வுகளுக்காக இலவசமாக 5 மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் 21.01.2026, 24.01.2026, 27.01.2026, 31.01.2026 மற்றும் 02.02.2026 ஆகிய தேதிகளில் நடைபெறும். தேர்வர்கள் தேர்வு நடைபெறும் நாளில் நேரில் பதிவு செய்து தேர்வுகளை எழுதலாம்.
News January 21, 2026
தி.மலையில் மலிவு விலையில் வீடுகள்!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <
News January 21, 2026
தி.மலையில் துடிதுடித்து பலி!

கண்ணமங்கலம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் காலனியைச் சேர்ந்த சஞ்சய்(22), குமார்(22) ஆகியோர் பைக்கில் கடந்த ஜன.18ஆம் தேதி வண்ணாங்குளம் பஜார் பகுதியில் சென்றனர். அப்போது, வேலூர் நோக்கி வந்த சுற்றுலா பஸ் மோதியது. இதில், படுகாயமடைந்த இருவரையும் சிகிச்சைக்கு அனுமதித்த போது சஞ்சய் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குமார் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


